Show all

ஹாக்கி வீரர் குர்பஜ் சிங்கிற்கு 9 மாதம் தடை

இந்திய ஹாக்கி வீரர் குர்பஜ் சிங்கிற்கு 9 மாதம் தடை விதித்துள்ளது ஹாக்கி இந்தியா ஒழுங்கு நடவடிக்கைக் குழு.

கடந்த மாதம் பெல்ஜியத்தில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் அரை இறுதி போட்டியின்போது குர்பஜ் சிங், இந்திய அணியில் கோஷ்டி பூசலை உருவாக்கியதாகவும், வீரர்களிடையே பிளவு ஏற்படுத்தியதாகவும் கூறி முன்னாள் இந்திய பயிற்சியாளர் ஜூடே பெலிக்ஸ் அறிக்கை அளித்திருந்தார்.

இது தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற ஹாக்கி இந்தியா ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது. அதன்முடிவில் குர்பஜ் சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டது. தடையை எதிர்த்து ஒரு மாதத்துக்குள் குர்பஜ் சிங் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஹாக்கி இந்தியா ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ஹர்பிந்தர் சிங் கூறுகையில், “குர்பஜ் சிங்கிற்கு 9 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு எதிரான மனு தள்ளுபடி கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு எதிரான மனுவை மத்திய பிரதேச உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சமூக ஆர்வலர் வி.கே.நவாஸ், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு இன்று விசாரணைக்கு வந்தது இந்த மனுவில் கூறியிருப்பதாவது:

முன்னாள் கிரிக்கெட் வீரர், சச்சின், வர்த்தக நோக்குடன் விளம்பர படத்தில் நடித்து பணம் சாம்பாதிக்கிறார். இது இவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவமதிப்பதாகும். எனவே பாதர ரத்னா விருதை அவரிடமிருந்து பறிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது இந்த வழக்கை நீதிபதிகள் ராஜேந்திர மேனன், எஸ்.கே. குப்தா ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

மனு தாரார் கூறியதில் முகாந்திரம் இல்லை. இது தொடர்பாக அவர் மத்திய பிரதேச அரசை அணுகலாம் அல்லது சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யலாம். எனனே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.