Show all

ரக்பி விளையாட்டு வீரர் மரணம் தொடர்பாக ராஜபக்சே மகன் மீது சந்தேகம்

இலங்கையில் பிரபல ரக்பி விளையாட்டு வீரர் மர்மான முறையில் மரணம் அடைந்த வழக்கில், அப்போதைய ராஜபக்சே அரசு உரிய விசாரணை நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சிறிசேனா தலைமையிலான அரசு, ராஜபக்சே குடுமபத்தினரின் முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல், கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கையில், தேசிய ரக்பி விளையாட்டு வீரர் வாசிம் தாஜுதீன், காரில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

வாசிம் தாஜூதின் இறந்ததற்கு சக ரக்பி வீரரும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இரண்டாவது மகனுமான யோசிதா ராஜபக்சே தான் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், வாசிம், விபத்தில் இறந்ததாக கூறிய போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், வாசிம் மரணம் தொடர்பாக புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் வழக்கை மீண்டும் நடத்த அனுமதி தருமாறு கோரி, நீதிமன்றத்தில் போலீசார் அனுமதி கோரியிருந்தனர். நீதிமன்றம் அனுமதி அளித்தையடுத்து மறு விசாரணை நடத்த, தாஜுதீன், உடல், இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த மரணத்துக்கும் தனது மகனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.