Show all

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் முரளி விஜய் விளையாடுவாரா?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான மூன்று முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (12-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. காயம் காரணமாக பயிற்சி ஆட்டத்தில் விஜய் பேட்டிங் செய்யவில்லை.

எனவே, முதல் போட்டியில் முரளி விஜய் இடம்பிடிப்பாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ரவிசாஸ்திரி ‘‘முரளி விஜய்க்கு தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையவில்லை. இதனால் அவர் முதல் டெஸ்ட்டில் விளையாடுவதற்கான உடற்தகுதியை பெற வாய்ப்பில்லை. அவர் முழுஉடல் தகுதி பெறாவிட்டால் நாங்கள் அவரை களம் இறக்கமாட்டோம். விஜய் அணியில் இடம்பெறாவிட்டால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பாகும்’’ என்றார்.

இதனால் காலே டெஸ்டில் முரளி விஜய் களம் இறக்கப்படமாட்டார் என்றே தெரிகிறது. விஜய் விளையாடாவிட்டால் அவருக்குப் பதிலாக தவானுடன் கர்நாடகாவைச் சேர்ந்த லோகேஷ் ராகுல் துவக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.