Show all

அஜித்-தின் புதிய படம் 'வெட்டி விலாஸ்'

அஜித்தின் புதிய படத்தின் தலைப்பை பற்றிய சில செய்திகள் வெளியாகியுள்ளன. சிறுத்தை சிவாவுடன் மீண்டும் இணைந்து அஜித் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, இத்தாலி என பல இடங்களில் நடைபெற்றது. சமீபத்தில் இத்தாலியில் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு, கொல்கத்தாவில் முகாமிட்டிருந்த படக்குழு, தற்போது அங்கேயும் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டது. ஒருவார இடைவெளிக்கு பிறகு சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர். இன்னும் ஒருசில நாட்களுக்குள் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் நிலையில், இப்படத்திற்கு தலைப்பு வைத்துவிட படக்குழுவினர் முடிவு செய்தனர்.

சிவா-அஜித் கூட்டணியில் ஏற்கெனவே வெளிவந்த ‘வீரம்’ படம் பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து ஆங்கிலத்தில் 'V' என்று தொடங்கும்படி தலைப்பை வைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி, முதலில் ‘வரம்’ பெயரை வைக்க திட்டமிட்டதாகவும் தற்போது இப்படத்திற்கு ‘வெட்டி விலாஸ்’ என்ற தலைப்பை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.