Show all

2015 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரை வென்றது இங்கிலாந்து

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 495 ரன்கள் வித்தியாசத்திலும் . மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 60 ரன்னில் சுருண்டது. அதை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 85.2 ஓவர்களில் 391 ரன்கள் எடுத்திருந்தபோது தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதனால் அந்த அணி 331 ரன்கள் முன்னிலை பெற்றது.

அதை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 3-ம் நாளான இன்று 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி இன்னிங்க்ஸ் தோல்வியை தழுவியது.இந்த வெற்றி மூலம் உள்நாட்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து தொடர்ச்சியாக 4-வது தொடர் வெற்றியை ஈட்டியுள்ளது.

தோல்வி குறித்து பேசிய மைக்கேல் கிளார்க் இந்த தொடரோடு சர்வதேச போட்டியில் இருந்த ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.