Show all

பாரசூட் ஜம்பிங் பயிற்சி பெறும் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக உள்ள மகேந்திர சிங் தோனி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் அமைந்திருக்கும் 'எலைட் பாரா ரெஜிமெண்ட்' ராணுவ முகாமில் சிறப்பு பயிற்சி பெற்று வருகிறார்.

ஏற்கனவே, கடந்த 2011-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் லெப்டினெண்ட்டாக நியமிக்கப்பட்டு இந்திய அரசால் கவுரவிக்கப்பட்ட தோனி, கடந்த ஐந்தாம் தேதி பயிற்சி பெறுவதற்காக இந்த முகாமில் வந்து சேர்ந்தார். இருவார கால பயிற்சிக்கு பின்னர் குறைந்தபட்சம் ஐந்து முறையாவது ராணுவ விமானத்தில் இருந்து பாரசூட் மூலம் கீழே குதித்து அவர் சாகசம் நிகழ்த்துவார் என அவருக்கு பயிற்சி அளிக்கும் ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக கடமையாற்ற வேண்டும் என்பது எனது சிறுவயதில் இருந்து நான் வளர்த்து வந்த இலட்சியக் கனவாக இருந்து வந்துள்ளது. தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், முழுமூச்சாக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றவே விரும்புகிறேன் என இதற்கு முன்னர் ஒரு பேட்டியின்போது தோனி குறிப்பிட்டிருந்தது, நினைவிருக்கலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.