Show all

உலக கால்பந்து தர வரிசை

உலக கால்பந்து அணிகளின் தர வரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி அர்ஜென்டினா அணி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனி 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பெல்ஜியம் அணி 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. கொலம்பியா அணி 4-வது இடத்தில் தொடருகிறது. பிரேசில் அணி 6-வது இடத்தில் இருந்து ஒரு இடம் ஏற்றம் கண்டு 5-வது இடத்தை பிடித்துள்ளது.

போர்ச்சுகல், ருமேனியா, இங்கிலாந்து, வேல்ஸ், சிலி அணிகள் தலா ஒரு இடம் முன்னேற்றம் கண்டு முறையே 6-வது, 7-வது, 8-வது, 9-வது, 10-வது இடத்தை பிடித்துள்ளன. மெக்சிகோ அணி 14 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தையும், ஜமைக்கா அணி 21 இடங்கள் முன்னேறி 55-வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்திய அணி 156-வது இடத்தில் நீடிக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.