Show all

ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பல்க்னெர் வாகனம் ஓட்ட தடை

கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்தில் உள்ள லங்காஷையர் கவுண்டி அணியில் 20 ஓவர் போட்டியில் விளையாடி வந்தார். அங்கு பல்க்னெர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவரது ரத்தம் 3 முறை பரிசோதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அவரது ரத்தத்தில் மதுவின் அளவு அதிகமாக இருந்ததால், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக பால்க்னெரை மான்செஸ்டர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு மான்செஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், ஜேம்ஸ் பல்க்னெருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 9 லட்ச ரூபாய் அபராதமும் இரண்டு ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையால், மிகுந்த சங்கடம் அடைந்துள்ளதாகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ஜேம்ஸ் பல்க்னெர் தெரிவித்துள்ளார்.

நன்னடத்தை புகாரில் ஜேம்ஸ் பல்கெனர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் தற்காலிக தடைவிதித்துள்ளது. இதன்காரணமாக அவர் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நடைபெறும் அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.