Show all

தீவிரவாதிகளை வேட்டையாடும் முன்னாள் ஹாக்கி வீரர்

கடந்த 2001ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணியின் இளம் வீரராக இருந்தவர் ஜக்ராஜ்சிங். சிறந்த டிராக்பிளிக்கர்... பெனால்டி கார்னர்களை கோலாக்குவதில் ஸ்பெஷலிஸ்ட். கடந்த 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி ஜலந்தர் அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கிய ஜக்ராஜ்சிங்கால் படுகாயமடைந்தார். இதன் காரணமாக அவரால் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. விபத்தில் சிக்கும் போது ஜக்ராஜ்சிங்குக்கு வயது 20தான்.

எனினும் கடுமையான உழைப்பினால் தற்போது பஞ்சாப் காவல்துறையில் டி.எஸ்.பி ரேங்கில் ஜக்ராஜ்சிங் பணியில் உள்ளார். அம்ரிஸ்தர் மாவட்டத்தில் டி.எஸ்.பியாக பணியாற்றி வரும் அவருக்கு குர்தாஸ்பூர் போலீஸ்நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்த தகவல் வந்ததும் உடனடியாக தனது குழுவுடன் அங்கு கிளம்பினார்.

குர்தாஸ்பூரில் தாங்கள் நடத்திய தாக்குதல் குறித்து 32 வயதான ஜக்ராஜ்சிங் கூறுகையில், '' எங்களுக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக அங்கு புறப்பட்டோம். காலை 8.15 மணிக்கு தீவிரவாதிகள் பதுங்கியிருந்த தினாநகர் காவல் நிலையத்துக்கு சென்று விட்டோம்.

நான் தீவிரவாதிகளை நோக்கி பல ரவுண்டுகள் சுட்டேன். சுமார் 12 மணி நேரத் தாக்குதலுக்கு பின் உள்ளேயிருந்த 3 தீவிரவாதிகள் உயிரிழந்தனர் .முதல் இன்னிங்சில் தேசத்துக்காக ஹாக்கி விளையாடினேன். இரண்டாவது இன்னிங்சில் தேசத்துக்காக தவிரவாதிகளை வேட்டையாடுகிறேன்'' என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.