Show all

ஆஸ்திரேலியா அணி வங்கதேசம் சுற்றுப்பயணம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் அக்டோபர் 9ம் தேதி சிட்டகாங்கிலும், 2வது டெஸ்ட் அக்டோபர் 17ம் தேதி டாக்காவிலும் தொடங்குகிறது. முன்னதாக வங்கதேச கிரிக்கெட் வாரிய லெவன் அணியுடன் 3 நாள் பயிற்சி போட்டியிலும் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. இந்த பயிற்சி போட்டி அக்டோபர் 3ம் தேதி துவங்குகிறது.

தற்போது ஆஸ்திரேலியா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து சுற்றுப்பயணம் செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் வங்கதேச தொடரில் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. 9 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடக்கும் 3வது டஸ்ட் தொடர் இது. இதுவரை இரு அணிகளுக்கு இடையே நடந்த 4 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.