Show all

ஷாருக் கானுக்கு வான்கடே மைதானத்தில் நுழைய தடை நீக்கம்

கடந்த 2012 ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

அப்போது மைதானத்துக்குள் நுழைந்த கொல்கத்தா அணியின் இணை உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாரூக் கானுக்கும் மைதானத்தின் பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது ஷாரூக் கான் தகாத வார்த்தைகளை கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சர்ச்சையைக் கிளப்பிய இந்த விவகாரத்தில் மும்பை கிரிக்கெட் சங்கம், வான்கடே மைதானத்துக்குள் நுழைய ஷாரூக் கானுக்கு தடைவிதித்தது.

இந்நிலையில் எம்சிஏ ஆலோசனைக் கூட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஷாரூக் கான் மீதான தடையை நீக்குவது, சூதாட்டப் புகாரிலிருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கும் அங்கித் சவாணின் கோரிக்கை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன் பின்னர் எம்சிஏ துணைத் தலைவர் ஆஷிஸ் ஷீலர் கூறியதாவது:

ஷாரூக் கான் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்த முன்மொழிவுக்கு எம்சிஏ தலைவர் சரத் பவார் முன் அனுமதி வழங்கினார்.

மேலும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் இதற்கு ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர். எனவே ஷாரூக் கான் மீது விதிக்கப்பட்ட தடை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.