Show all

ஜிம்பாப்வே அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அதிர்ச்சி தோல்வி

ஜிம்பாப்வே அணியுடன் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோவியடைந்தது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்துவீசியது. நியூசிலாந்து 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன் குவித்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 97 ரன் (102 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்), ராஸ் டெய்லர் 112* ரன் (122 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), எலியட் 43 ரன் விளாசினர். அடுத்து கடினமான இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 49 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 304 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. மசகட்சா 84 ரன் (99 பந்து, 10 பவுண்டரி), சிபாபா 42, கேப்டன் சிகும்புரா 26 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அபாரமாக விளையாடிய கிரெய்க் எர்வின் 130 ரன் (108 பந்து, 11 பவுண்டரி, 5 சிக்சர்), வில்லியம்ஸ் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். எர்வின் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஜிம்பாப்வே 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நாளை நடைபெறுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.