Show all

முதல் நாளில் வங்காளதேசம் 246 ரன்கள் குவிப்பு

வங்காளதேசம்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் இன்று மிர்புரில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தமீம் இக்பால், இம்ருல் கெய்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

வங்காளதேசம் தரப்பில் அதிக பட்சமாக மொமினுல் ஹக்யூ 40 ரன்களும் முஷிபிகுர் ரஹிம் 65 ரன்களும் எடுத்தனர்.அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நசிர் ஹொசைன் 13 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஸ்டெய்ன் மற்றும் டுமினி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.