Show all

6996 கைதிகள் நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்

மியான்மரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 6996 கைதிகள் நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மியான்மரில் பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கிய வெளிநாட்டினர் உள்பட ஏராளமான கைதிகள் அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 6996 கைதிகளை நன்னடத்தை காரணமாக அந்நாட்டு அரசு இன்று விடுதலை செய்துள்ளது.

குடயரசு தலைவர் உத்தரவின் பேரில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு அந்நாட்டு தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட 6996 கைதிகளில் 210 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.

210 வெளிநாட்டு கைதிகளில் 155 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். வடக்கு மியான்மரில் சட்டவிரோதமாக மரம் வெட்டியதாக கைது செய்யப்பட்ட 155 பேருக்கும் நீண்ட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் அவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.