Show all

சாதி வாரி கணக்கெடுப்பில் எட்டு கோடிப் பிழைகள்

சாதி வாரி கணக்கெடுப்பில் எட்டு கோடிப் பிழைகள் உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சாதி வாரி கணக்கெடுப்பை வெளியிட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் நடுவண் அரசை வலியுறுத்தி வருகின்றன.
இதையடுத்து சாதி வாரிக் கணக்கெடுப்பில் 8 கோடிப் பிழைகள் உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் பிழைகளைத் திருத்தும் பணியில் உள்துறை அமைச்சகம் ஈடுபட்டு உள்ளது என்றும் அந்த அமைச்சகத்தின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.