Show all

ஃபிஃபா தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார் மரடோனா

சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடைபெற்ற ஃபிஃபா தலைவருக்கான தேர்தலில், பிளேட்டர் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், ஊழல், முறைகேடு காரணமாக ஃபிஃபா முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டதால், பிளேட்டர் பதவி விலக வேண்டும் என்று உலகெங்கும் எதிர்ப்பு நிலவியது. இதையடுத்து பிளேட்டர், தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அத்துடன் விரைவில் ஃபிஃபா மாநாட்டைக் கூட்டி, அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதை அடுத்து, அந்த பதவிக்கு பொருத்தமானவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பிஃபா தலைவர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் வீரர் மரடோனா போட்டியிடவார் என தெரிகிறது.

விதிமுறைப்படி, டிசம்பர் மாத இறுதியில் இருந்து அடுத்த மார்ச் மாதத்துக்குள் ஃபிஃபா மாநாட்டை நடத்த வேண்டும். அதுவரை பிளேட்டரே தலைவராக நீடிப்பார். இருப்பினும், இப்போதிருந்தே அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஃபிஃபா தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அவருடைய தந்தை காலமானார். அதை முன்னிட்டு அவர் தன் ரசிகர்களுக்கு வீடியோ மூலமாக வெளியிட்டுள்ள செய்தியில், என் அர்ஜெண்டினா மக்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். நான் மிகவும் வலுவானவன். எனக்கு மக்களின் ஆதரவு உள்ளது. நான் திரும்பி வரும்போது மீண்டும் என் பணியைத் தொடர்வேன். ஃபிஃபாவுக்காக மீண்டும் வருவேன் று கூறியுள்ளார்.

இதனால் ஃபிஃபா தலைவர் பதவிக்கான தேர்தலில் மரடோனாவும் போட்டியிட உள்ளார் எனத் தெரிகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.