Show all

இந்திய ஆண்கள் ஆக்கி அணி ஸ்பெயின் மற்றும் பிரான்சிற்கு சுற்றுப் பயணம்

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ஹாக்கி போட்டிகளில் விளையாட உள்ளது. வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14-ந் தேதி சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இந்திய அணி பிரான்ஸ் அணியுடன் 2 ஆட்டங்களிலும், ஸ்பெயின் அணியுடன் 3 ஆட்டங்களிலும் விளையாட இருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்துக்கான இந்திய ஆண்கள் ஆக்கி அணியை, ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது. கேப்டனாக சர்தார்சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக இருந்த பால்வெண் ஆஸ் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அவருக்கு பதில் அணியின் திறன் மேம்பாட்டு இயக்குநர் ரோலண்ட் ஓல்ட்மன்ஸ் கூடுதலாக பயிற்சியாளர் பொறுப்பையும் கவனித்துக் கொள்வார் என்று ஹாக்கி இந்தியா அமைப்பு அண்மையில் அறிவித்தது.

ஐரோப்பிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய ஆண்கள் ஆக்கி அணி வருமாறு:- ஸ்ரீஜேஷ், ஹர்ஜோத்சிங் (கோல்கீப்பர்கள்), பிரேந்திர லக்ரா, கோதாஜித்சிங், ரகுநாத், ஜஸ்ஜித்சிங், ரூபிந்தர்பால்சிங், குர்ஜிந்தர்சிங், சர்தார்சிங் (கேப்டன்), ஷிங்லென்சானா சிங், உத்தப்பா, சத்பிர்சிங், டேனிஷ் முஜ்தபா, தேவேந்தர் வால்முகி, சுனில், ரமன்தீப்சிங், ஆகாஷ்தீப்சிங், மன்தீப்சிங், தல்விந்தர்சிங், லலித் உபாத்யாய், முகமது அமீர்கான்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.