Show all

இந்தியா-பாகிஸ்தான் தொடர் கிடையாது

2023-ம் ஆண்டுவரையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே 5 கிரிக்கெட் தொடரை நடத்த இருதரப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகிஉள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் இருநாடுகள் இடையிலான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தது. இவ்விவகாரத்தை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்து இருந்தது, இந்நிலையில் குர்தாஸ்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீண்டும் கிரிக்கெட் வாரியத்தை பின்வாங்க செய்து உள்ளது.

இதனால் கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் கிரிக்கெட் போட்டியை சிறிது காலம் கழித்து நடத்தலாம் என்று அறிவித்துவிட்டார். இந்தியா- பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியை விட தேச பாதுகாப்பே முக்கியம் என்று பிசிசிஐ தெரிவித்துவிட்டது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ஆதரவு தெரிவித்து உள்ளார். “விளையாட்டு நடைபெற வேண்டும் என்றால் அதற்கு முன்னதாக தீவிரவாதம் முழுவதும் வெளியேறவேண்டும் என்ற பி.சி.சி.ஐ. கூறியது சரியானது என்றே நான் நினைக்கின்றேன்.” என்று கங்குலி கூறிஉள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.