Show all

தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் கிளைவ் ரைஸ் மரணம்

மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராகக் கருதப்படும் 66 வயதான தென் ஆப்பிரிக்காவின் கிளைவ் ரைஸ் கேப்டவுனில் மரணமடைந்தார்.

சிலகாலமாக அவர் மூளைக்கட்டி நோயினால் அவதிப்பட்டு வந்தார். கடந்த மார்ச் மாதம் புற்று நோய் தொடர்பான சிகிச்சைக்காக பெங்களூரு வந்திருந்தார்.இவர் கிரிக்கெட்டில் மும்முரமாக ஆடிய காலத்தில் தென் ஆப்பிரிக்க அணி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்டதால் இவரால் அதிகமான சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் போனது.

தடை நீக்கப்பட்ட பிறகு, 1991-ல், இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கிளைவ் ரைஸ் இருந்தார். அப்போது அவருக்கு வயது 42. மொத்தமாக 3 சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். ஆனால் முதல் தர கிரிக்கெட்டில் இவர் அதிகம் சாதித்துள்ளார். பேட்டிங்கில் 40.95, பவுலிங்கில் 22.49 என சராசரிகளை வைத்துள்ளதால் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராகப் புகழப்படுகிறார். முதல் தர கிரிக்கெட்டில் 26, 331 ரன்களையும் 930 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.