Show all

பார்முலா 1 கார் பந்தய போட்டியின் 10 வது சுற்றில் செபாஸ்டியன் வெட்டல் வெற்றி

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 19 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 10-வது சுற்றான ஹங்கேரி கிராண்ட்பிரி, புடாபெஸ்ட் நகரின் அருகே உள்ள ஹங்காரோலிங் ஓடுதளத்தில் நேற்று நடந்தது.

போட்டிக்கான பந்தய தூரம் 306.663 கிலோ மீட்டர் ஆகும். இதை ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) இலக்கை ஒரு மணி 46 நிமிடம் 09.985 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். இந்த சீசனில் வெட்டல் பதிவு செய்த 2-வது வெற்றி இதுவாகும்.மேலும், 2-வதாக இளம் வீரர் ரஷியாவின் டேனியல் கிவ்யாட்டும் (ரெட்புல் அணி), 3-வதாக ஆஸ்திரேலியாவின் டேனியல் ரிச்சியார்டோவும் வந்தனர்.

இதுவரை நடந்துள்ள 10 சுற்று போட்டிகளின் முடிவில் ஹாமில்டன் 202 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நிகோ ராஸ்பெர்க் 181 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், செபாஸ்டியன் வெட்டல் 160 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.