Show all

அக்டோபரில் இந்தியா வருகிறது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள், 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. சுமார் 72 நாட்கள் இந்தியாவில் தென் ஆப்பிரிக்க அணி விளையாட உள்ளது. 2 மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் தென் ஆப்பிரிக்க அணி சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுதான் முதல் முறையாகும்.

அதேபோல், இந்தியாவுக்கு எதிராக இந்திய மைதானங்களில் முதன் முறையாக 20 ஓவர் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. மற்றொரு சிறப்பம்சாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான ஏபி டிவில்லியர்ஸ் தனது 100 வது டெஸ்ட் போட்டியை பெங்களூரில் நடைபெறும் 2 வது டெஸ்ட் போட்டியின் போது நிறைவு செய்கிறார்.

மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் ஒரு நாள் போட்டி நடக்க இருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.