Show all

பாரத ரத்னா விருதை வணிகப்பொருட்கள் தொடர்பான விளம்பரங்களுக்கு சச்சின் தெண்டுல்கர் பயன்படுத்த

இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சச்சின் தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. நாட்டின் மிக உயர்ந்த விருதை வணிகப்பொருட்கள் தொடர்பான விளம்பரங்களுக்கு சச்சின் தெண்டுல்கர் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

மத்திய பிரதேச மாநிலதலைநகர் போபால் உயர்நீதிமன்றத்தில் வி.கே.நேஸ்வாஎன்பவர் ஒரு பொது நலமனுதாக்கல் செய்தார். அதில் சச்சினுக்கு வழங்கப்பட்ட பாரதரத்னாவிருதை திரும்பபெற மத்திய அரசுக்குஉத்தர விடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

உயர் நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, பாரத ரத்னா விருதை விளம்பரங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்பதற்கான சட்டவிதிகளை சமர்ப்பிக்கு மாறுமனுதாரரிடம் நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர். இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாரதரத்னா என்பது பட்டம் அல்ல என்றும், அது உயர்ந்த ஒரு விருது என்றும் உயர் நீதிமன்றத்தில் கடந்த 1995-ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்ததை மனுதாரர் சுட்டிக் காட்டினார். இது தொடர்பான ஆவணங்களையும் அவர் உயர்நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

இதைத் தொடர்ந்து அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதன் அடுத்த விசாரணையை 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.