Show all

என்எல்சி தொழிலாளர் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தின

என்எல்சி தொழிலாளர் வேலை நிறுத்தத்தை முதலமைச்சர் ஜெயலலிதா முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''என்.எல்.சி. தொழிற்சங்கங்களுடன் சென்னையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனம், ஊழியர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வு அளிக்க முன் வர மறுப்பது நியாயமாகாது.

சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிற நிலையில், தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நிலவிக் கொண்டிருக்கும்போது, உறுதியாகக் கிடைத்து வரும் மின்சாரத்திற்கும் கேடு ஏற்படக் கூடுமென்று எச்சரிக்கப்பட்டுள்ள சூழலில் அரசின் சார்பில் முதலமைச்சரே தலையிட்டு, நிர்வாகத்தையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் நேரில் அழைத்துப் பேசி பிரச்னைகளுக்குத் தக்கதொரு முடிவு காணாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

கடந்த காலத்தில், தி.மு.க. ஆட்சியில், இது போன்றதொரு பிரச்னை ஏற்பட்ட போது, முதலமைச்சராக இருந்த நான் நேரில் அனைவரையும் அழைத்துப் பிரச்னையை சுமூகமாகத் தீர்த்து வைத்தேன். எனவே, இனியும் தாமதிக்காமல் உடனடியாக முதலமைச்சர் ஜெயலலிதா நடைபெறும் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன்'' எனக் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.