Show all

நடிகர் சூர்யாவுக்கு நேற்று 40-வது பிறந்தநாள்

தமிழ் சினிமா துறையில் அழகான, திறமைவாய்ந்த நடிகர்கள் பட்டியலில் கண்டிப்பாக நடிகர் சூர்யாவின் பெயர் முன்னிலை வகிக்கும். இன்று சூர்யா தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஜூலை 23, 1975ஆம் ஆண்டு பிறந்த இவரது இயற்பெயர் சரவணன். நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர் கார்த்தியின் அண்ணனும் ஆன இவர் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதில் மிகுந்த திறன்மிக்கவராக விளங்குகிறார்.

இவர் நந்தா திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதினை வென்றுள்ளார். ரொமாண்டிக் ஹீரோ என்ற அந்தஸ்தை கொண்டுள்ள சூர்யா சக நடிகையான ஜோதிகாவை காதலித்து மணந்துகொண்டார். சினிமாத்துறை மட்டுமின்றி பொதுப்பணியிலும் அவர் தனது பங்கை செலுத்தி வருகிறார். ‘அகரம் அறக்கட்டளை’ அமைப்பை நிறுவி அதன் மூலம் பல ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு உறுதுணையாக விளங்குகிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.