Show all

ஈரோட்டில் பா.ஜனதா கட்சியின் சார்பாக கணக்காய்வாளர் இரமேசுக்கு நினைவேந்தல்

பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர் ராஜன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் மறைந்த மாநில பொதுச்செயலாளரும், மூத்த தலைவருமான கணக்காய்வாளர் இரமேசின் உருவ படத்திற்கு மாலை அணிவித்தார்.

இதன் பின்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் நிருபர்களுக்கு பேட்டியில் அவர் கூறியதாவது: அ.தி.மு.க.– தி.மு.க. கட்சிகளுக்கு மாற்று சக்தியாக பா.ஜனதா கட்சி உருவாகி வருகிறது. வருகிற 2016 சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கூட்டணியை 2016 தேர்தலில் வெற்றி பெறும். ஆம்பூர் கலவரம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த கலவரத்தில் போலீசார் தாக்கப்பட்டனர். இந்த கலவரத்தை பற்றி எந்த அரசியல் கட்சியினரும் குரல் கொடுக்க வில்லை என்பது வருத்தத்திற்குரியது.

தமிழக அரசு செயலற்ற அரசாக இருந்து வருகிறது. எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. மேலும் தமிழகத்தில் தற்கொலையும் அதிகரித்து உள்ளது. இதற்கு காரணம் பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை இல்லாதது தான்.சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது. பெரிய தொழிற்சாலைகளும் புதிதாக எதுவும் தொடங்கப்பட வில்லை. இதனால் தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லா சூழ்நிலை மக்களுக்கு இருந்து வருகிறது.

தி.மு.க. ஆட்சி காலத்திலும் ஊழல் மலிந்து கிடந்தது. தி.மு.க– அ.தி.மு.க. இந்த 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்ததால் தமிழகத்தில் வளர்ச்சி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் வளர்ச்சி ஏற்பட்டது.மத்தியில் கூட்டணி வைத்து கொண்டு மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி இல்லை என்று பா.ம.க. கூறி வருவது ஆரோக்கியமான அரசியல் அல்ல. இவ்வாறு தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.