Show all

லோதா குழு தீர்ப்பை ஆராயும் கமிட்டியில் கங்குலி

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் லோதா தீர்ப்பு குறித்து ஆராயும் குழுவை பிசிசிஐ அமைத்ததுள்ளது. 2013–ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் எழுந்த சூதாட்ட புகார் குறித்து நீதிபதி முகுல் முட்கல் கமிட்டி அளித்த அறிக்கையை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 3 பேர் கொண்ட கமிட்டியை நியமித்தது.

இந்த கமிட்டி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 ஆண்டுகள் விளையாட தடை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் பெட்டிங்கில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு ஆயுட்கால தடையும் விதித்தது.இது குறித்து ஆலோசிக்க ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழுவின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தின் முடிவில், லோதா குழு அளித்த தீர்ப்பு குறித்து ஆராய குழு ஒன்றை அமைக்கப்படும் எனவும் மற்றும் அந்த குழு 6 வாரத்துக்குள் தங்களது ஆய்வு அறிக்கையை ஐ.பி.எல் ஆட்சி மன்ற குழுவிடம் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த முடிவின் படி லோதா குழு அளித்த உத்தரவை ஆராயும் கமிட்டி ஒன்றை பிசிசிஐ அமைத்தது. இதில், ராஜீவ் சுக்லா, அனுராக் தாகூர், சவுரவ் கங்குலி, அனிருத் சவுத்ரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.