Show all

மாநில முதலமைச்சர்களுடன் மோடி நிதி ஆயோக் குறித்து ஆலோசனை

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21–ந் தேதி தொடங்கி, ஆகஸ்டு 13–ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் தற்போதைய பாரதீய ஜனதா கூட்டணி அரசு சில திருத்தங்களை கொண்டு வந்து புதிய மசோதாவை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறது.ஆனால் இந்த மசோதாவில் விவசாயிகளுக்கு பாதகமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறி, மசோதாவை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த பிரச்சினையில் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த விரும்பிய மத்திய அரசு, மசோதாவில் சில திருத்தங்களை செய்தது. அத்துடன் மசோதாவை நாடாளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது.ஆனால், அந்த குழு கூடுதல் அறிக்கை அளிக்க காலஅவகாசம் கோரிய நிலையில், இது தொடர்பாக கருத்தொற்று ஏற்படுத்த மாநில முதலமைச்சர்கள் ‘நிதி ஆயோக்’ அமைப்பின் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றுவதில் உள்ள முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.