Show all

ஜிம்பாவே அணிக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி

ஜிம்பாவே அணிக்கு எதிரான 3 வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கே.எம் ஜாதவ் 105 ரன்களும் மனிஷ் பாண்டே 71 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் சிபாபா (82 ரன்கள்) ஒருபுறம் போராடினாலும் மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தது. வேறு எந்த வீரர்களும் அரை சதம் கூட அடிக்காததால் ஜிம்பாப்வே அணி 42.4 ஓவர்களில் 193 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வென்றது. இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாவே அணிக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.