Show all

அரசு மதுபானக் கடைகளை மூடக்கோரிய மனு தள்ளுபடி

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயேந்திரன், தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் அதிகரித்து வருவதால் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மூர்த்தி, ஆரம்பத்தில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயங்கிய மதுக்கடைகள், தற்போது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படுவதாகத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நீதிமன்ற அமர்வு அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை என்றும், அதே சமயம் பொதுமக்கள் மத்தியில் சமூக மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே மதுவிலக்கை அமல்படுத்த முடியும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.