Show all

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி மரணத்தை தழுவினார்

பழம்பெரும் திரைப்பட இசைமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. இன்று அதிகாலை 4.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று அதிகாலை காலமானார்.

சென்னை சாந்தோமிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைத்துறையினர், பொதுமக்கள் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 1200 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள எம்.எஸ்.வி யின் மறைவு அவரது ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல் நாளை காலை 10 மணிக்கு பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில், தகனம் செய்யப்படுகிறது.

எம்.எஸ். விஸ்வநாதன் பற்றிய சில முக்கியத் தகவல்கள்

எம்.எஸ்.விஸ்வநாதன் 24 ஜூன் 1928ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தார்.
இவர் முதன்முதலாக 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ’ஜெனோவா’ திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு இசையமைத்தார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 1200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
அவர் தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
இவருக்கு 1963 ஆம் ஆண்டு மெல்லிசை மன்னர் என்ற பட்டம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களால் வழங்கப்பட்டது.
கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தற்போதைய முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்கள் பாடியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.