Show all

2015-ன் அமெரிக்க அழகியாக ஒலிவியா ஜோர்டான் தேர்வு

அமெரிக்க அழகியை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி, லூசியானா மாகாணத்தில் உள்ள பேட்டன் ராக் என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இருந்து 51 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.அதில் நடையழகு, உடையழகு, பேச்சுதிறமை, அறிவுகூர்மை, என பல கட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் இறுதியாக ஒக்லஹாமா மாகாணத்தை சேர்ந்த மாடல் அழகி ஒலிவியா ஜோர்டான் என்பவர் தேர்வாகி உள்ளார். அவருக்கு பரிசுகளும், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.