Show all

அதிகரிக்கும் மக்கள் தொகை

பல நாடுகளில் குறைந்த மக்கள்தொகை இருந்தாலும் இந்தியாவைப் போல் விரைவாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு, விவரங்கள் வெளியிடப்படுவதில்லை. 2015-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கின்படி இந்திய மக்கள்தொகை 127 கோடியே 42 லட்சம் ஆகும். முதல் இடத்தில் இருக்கும் சீனாவின் மக்கள்தொகை 139 கோடி ஆகும்.

உலகின் மக்கள்தொகை அடர்த்தி சதுர கி.மீ. பரப்பளவுக்கு 52-ஆகவும், இந்தியாவில் 382-ஆகவும், தமிழ்நாட்டில் 555-ஆகவும் இருக்கிறது. 1952-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம்தான் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் நடவடிக்கையாகும். 1966-இல் மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் குடும்பக் கட்டுபாட்டுத் துறை என்ற முழு அளவிலான துறை ஏற்படுத்தப்பட்டது.

நெருக்கடி நிலை காலகட்டத்தில் (1975 - 1976) இந்தத் திட்டம் கட்டாயப்படுத்தியும் மிரட்டியும் செயல்படுத்தப்பட்டதால் பொதுமக்களிடையே முற்றிலும் வரவேற்பை இழந்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.