Show all

செரீனா வில்லியம்ஸ் 6–வது முறையாக சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், 20–ம் நிலை இளம் நட்சத்திரம் ஸ்பெயினின் கார்பின் முகுருஜாவும் மோதினர். கார்பின் முகுருஜா முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிசுற்றில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 மணி 3 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் 6–4, 6–4 என்ற நேர் செட்டில் முகுருஜாவை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை 6–வது முறையாக வென்றார். மொத்தத்தில் இது அவரது 21–வது கிராண்ட்ஸ்லாம் மகுடம் ஆகும்.

இன்று நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச்சுடன் சாதனை வீரர் ரோஜர் பெடரர் (2வது ரேங்க்) மோதுகின்றனர். டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.