Show all

மதராஸ் வர்த்தக மைய நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

108 கட்டுப்பாட்டு அறைக்கு வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ஒரு செல்லிடப்பேசியில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் குண்டு வெடிக்கும் எனவும், அந்த குண்டை தனது சகோதரர் வைக்கப்போவதாகவும் கூறிவிட்டு, இணைப்பைத் துண்டித்தார்.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த 108 கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள், திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த திருவல்லிக்கேணி போலீஸார், நந்தம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக நந்தம்பாக்கம் போலீஸார், வர்த்தக மையத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அவர்களுடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாரும் சோதனையில் ஈடுபட்டனர்.சனிக்கிழமை இரவு தொடங்கிய இச் சோதனை ஞாயிற்றுக்கிழமை காலை வரை நடைபெற்றது.

சோதனையில் எந்த வெடிப் பொருள்களும் சிக்கவில்லை. வதந்தியை ஏற்படுத்தும் நோக்கத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது.மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.