Show all

ஆஷஸ் டெஸ்ட்:முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 430 ரன்களும் ஆஸ்திரேலியா 308 ரன்களும் குவித்தன. 122 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 289 ரன்கள் சேர்த்தது, இதன் மூலம் இங்கிலாந்து அணி 412 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.இது ஆஷஸ் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து நிர்ணயித்த மிக அதிகமான வெற்றி இலக்கு ஆகும்.

இதற்கு முன்னர் 1948-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் இழப்புக்கு 404 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்ததே அதிகபட்ச இலக்காக இருந்தது. அந்த ஆட்டத்தில் ஆர்துர் மோரிஸ் 182 ரன்களும், டொனால்டு பிராட்மேன் 173 ரன்களும் விளாசி வெற்றியை தேடித்தந்தனர்.

மிக அதிக இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியின் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக 70.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 169 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.