Show all

தோழி அனுஷ்கா சர்மாவுடன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை பார்க்க வந்த விராட் கோலி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி அவரது தோழி அனுஷ்கா சர்மாவும் இதே அரையிறுதிப் போட்டியைப் பார்வையிட வந்தனர். இதே போட்டியை காண இந்திய கிரிக்கெட் அணியின் முன்னள் ஜாம்பவான் சச்சின் தனது மனைவி அஞ்சலியுடன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வையாளர் மாடத்தின் நடுப்பகுதியில் இவர்கள் அனைவரும் வரிசையாக அமர்ந்து இருந்தனர். விம்பிள்டனின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ரிச்சர்டு காஸ்கோவை வீழ்த்தி நோவாக் ஜோகோவிச் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.