Show all

பள்ளிகளின் கல்வித் தரம் அதலபாதாளத்துக்குச் செல்வதாக விஜயகாந்த் குற்றச்சாட்டு

கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளிப்படிப்பை முடித்து, மருத்துவம், பொறியியல், பட்டயக் கணக்காளர் படிப்புக்கு அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் தேர்வு எழுதியும் 33 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகும். இதே நிலைதான மருத்துவம், பட்டயக்கணக்காளர் படிப்புக்கும் உள்ளது.

கடந்த காலங்களில் இதே தேர்வில் தமிழகத்தைச் சார்ந்தோர் அதிகளவில் தேர்ச்சி பெற்றதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.இதற்கு முழு முதல் காரணம் தமிழகப் பள்ளிகளில் கல்வித் தரம் தேசிய கல்வித் தரத்துக்கு இணையாக இல்லை என்பதால்தான். எனவே, உலகத் தரத்துக்கு இணையாகவும், தேசிய கல்வி திட்டத்துக்கு இணையாகவும் பாடங்களை உருவாக்கி, தமிழக மாணவர்களை அறிவுத் திறன் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.