Show all

தென் ஆப்பிரிக்கா-வங்காளதேசம் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

தென் ஆப்பிரிக்கா-வங்காளதேசம் அணிகள் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடுகின்றன. இதன் முதலாவது ஆட்டம் மிர்புரில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

2017-ம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு தகுதி பெற இந்த தொடரில் குறைந்தது ஒரு ஆட்டத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற நெருக்கடியுடன் மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணி களம் காணுகிறது. இரு அணிகளும் இதுவரை ஒருநாள் போட்டியில் 14 முறை மோதி இருக்கின்றன. இதில் வங்காளதேச அணி ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக ஹசிம் அம்லா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.