Show all

நியூஸிலாந்துக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா

நியூஸிலாந்துக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது. இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் இந்தியா - நியூஸிலாந்து இடையிலான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்றது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டனும் தொடக்க வீராங்கனையுமான சுஸி பேட்ஸ் மட்டும் சிறப்பாக ஆடி 42 ரன்கள் சேர்த்தார். அதன் பிறகு வந்த அனிவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் நியூஸிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களுக்கு சுருண்டது.

அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 27.2 ஓவர்களில் ஒரு விக்கெடை மட்டும் இழந்து 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திருஷ் காமினி 62 ரன்களுடனும் (78 பந்து, 13 பவுண்டரி), தீப்தி சர்மா 44 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3-2 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது.

நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்றதால் ரூ.21 லட்சம் வெகுமதியாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.