Show all

ஈவிகேஎஸ் ஜெ-விற்கு சவால்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் விடுத்துள்ள சவாலில் அதிமுக அரசின் நான்காண்டு கால சாதனைகள் என தவறான தகவல்களை தருவதாக குற்றம் சாட்டுகிறார்.மின்தேவை முற்றிலும் தன்நிறைவு மாநிலமாக தமிழகம் ஒளிர்கின்றது என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்துள்ளார்.

அதிமுக ஆட்சியமைந்து புதிய மின்உற்பத்தி திட்டத்திற்காக முதலீடு செய்துள்ளது. ஆனால், இதுவரை 1 மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யவில்லை.
அப்படி உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரமும் கடந்த திமுக ஆட்சியில் முதலீடு செய்யப்பட்டு அதன் மூலமாக உற்பத்தி செய்யப்ட்ட மின்சாரம்தான். அதை தனது சாதனைகளாக கூறுவதற்கு ஜெயலலிதாவிற்கு உரிமையில்லை.

இன்றைக்கு முதலீடு செய்தால் 5 ஆண்டுகளுக்கு பின்புதான் மின் உற்பத்தி கிடைக்கும் என்பதை ஜெயலலிதா புரிந்தும் புரியாமலும் பேசி வருகிறார். தமிழ்நாட்டில் அனல், புனல், மின்நிலையங்கள் மூலமாகவும் மற்ற இதர வழிகளிலும் 7388 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய நிறுவுதிறன் உள்ளது.
பல்வேறு காரணங்களால் இதில் 60 சதவீதம் தான் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.மேலும் அவர் நான்காண்டு நடந்தது சாதனை அல்ல வேதனை என தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.