Show all

ஆசஸ் தொடர்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 347 ஓட்டங்கள் குவிப்பு

மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கார்டிப் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ஆடம் லைத்தும், அலாஸ்டர் குக்கும் இங்கிலாந்தின் இன்னிங்சை தொடங்கினர்.

ஆரம்பமே இங்கிலாந்துக்கு அதிர்ச்சியாக அமைந்தது ஆடம் லைத் (6 ரன்), கேப்டன் அலாஸ்டர் குக் (20 ரன், 40 பந்து, 3 பவுண்டரி) மற்றும் இயான் பெல் (1 ரன்) என 43 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்நிலையில் 4–வது விக்கெட்டுக்கு கேரி பேலன்சுடன், ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் ரன் கணக்கை துவங்கும் முன்னே கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஆஸ்திரேலி யாவின் விக்கெட் கீப்பர் முயற்சி செய்தும் பிடிக்க முடியாமல் வீணடித்தார்.

அதன் பிறகு இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் குவித்தனர். இந்த ஜோடி 4–வது விக்கெட்டுக்கு 153 ரன்கள் திரட்டியது. அணியின் ரன் 193 ஆகா இருந்த போது கேரி பேலன்ஸ் எல்.பி.டபிள்யூ. ஆனார். அதன் பிறகு ஜோ ரூட்டுடன் ஸ்டாக்ஸ் ஜோடி சேர்ந்தார்.

பொறுப்புடன் விளையாடிய ஜோ ரூட் 134 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்திருந்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.