Show all

குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பு முடிக்கும் வரை செல்போன் வாங்கி தரக்கூடாது - ராமதாஸ்

கோவை இடையார்பாளையம் அருகிலுள்ள தனியார் பள்ளி ஒன்றின் வகுப்பறையில் பாடவேளையின் போது 7 மாணவிகள் செல்போனில் ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த செய்தியை கேட்டதும் எங்கே போகிறது தமிழ்நாடு என்ற கவலை கலந்த அதிர்ச்சியும், வேதனையும் தான் என்னை வாட்டுகிறது.கல்வி எப்போது வணிக மயமானதோ, அப்போதே சீரழிவுகளும் தொடங்கி விட்டன. கடந்த காலங்களில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையிலான உறவு பெற்றோர்–குழந்தை உறவுக்கு இணையாக இருந்தது. அப்போது படிப்பை விட ஒழுக்கத்திற்கும், நல்வழக்கத்திற்கும் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

மாணவர்கள் நலனில் அக்கறை காட்டி அறிவுரை கூறும் ஆசிரியர்கள் அப்போது இருந்தனர். மாணவர்களை கண்டிப்பதற்கான உரிமையும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.தகவல் தொடர்புக்கு உதவியாக இருக்கும் செல்போன்கள் தான் சீரழிவுக்கும் காரணமாக உள்ளது என்பதால், பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் செல்போன்களை வாங்கித் தரக்கூடாது.
உறவினர்கள் எவர் மூலமாவது செல்போன் கிடைக்கிறதா? என்பதையும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அதேபோல் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்ற சுற்றறிக்கையை உறுதியாக கடைபிடிக்கும்படி பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை ஆணையிட வேண்டும்.

பள்ளிகளுக்கு வரும் மாணவர்களிடம் செல்போன்கள் உள்ளனவா என்பதை பள்ளி நிர்வாகங்கள் தினமும் நாகரீகமான முறையில் சோதனையிட வேண்டும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.