Show all

நடிகர்கள் சங்க தேர்தல் இடைக்கால தடையை நீக்க முடியாது - ஐகோர்ட்

நடிகர் சங்கத் தேர்தல் ஜூலை 15--ந்தேதி நடைபெறும் என்று கடந்த ஜூன் 5-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த தேர்தலுக்கு தடை விதிக்க கோரி இடைக் கால மனு ஒன்றையும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிசந்திரபாபு, இடைக்கால மனு மீது கடந்த 26-ந்தேதி தீர்ப்பு அளித்தார். அதில், நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலுக்கு தடை விதித்து இருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதாரவி மேல்முறையீடு செய்துள்ளார்.இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நடிகர் சங்க தேர்தலுக்கு தனி நீதிபதி தடை விதித்த உத்தரவில் எந்த குறைபாடும் எங்களுக்கு தெரியவில்லை. எனவே, அந்த தடையை நீக்க முடியாது. மனு மீதான விசாரணையை வருகிற 28-ந்தேதிக்க தள்ளிவைக்கிறோம் என்று உத்தரவிட்டார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.