Show all

கலாம் பெயரை பயன்படுத்த பொன்ராஜ் கட்சிக்கு உயர்நீதிமன்றம் தடை

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரைப் பயன்படுத்த, அவரது உதவியாளராக இருந்த பொன்ராஜ் துவக்கிய கட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், அப்துல் கலாம் லட்சிய இந்தியா என்ற பெயரில் அரசியல் கட்சியைத் துவக்கினார்.

 

அப்துல் கலாம் ஒரு பொது முகம். அவரது கனவுகளை நிறைவேற்றவே அவரது பெயரில் கட்சி தொடங்கியிருக்கிறோம். அதில் தவறு ஏதும் இல்லை என அவர் கூறியிருந்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இக்கட்சி போட்டியிடுகிறது.

 

இந்நிலையில், பொன்ராஜ் துவக்கியுள்ள கட்சிக்கு, அப்துல் கலாமின் பெயரைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, கலாமின் சகோதரர் முகமது முத்துமீரான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசியல் காரணங்களுக்காக அப்துல் கலாம் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது எனத் தீர்ப்பளித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.