Show all

ஆகா, காந்தியாருடைய அந்த விருப்பம் மட்டும் நிறைவேறியிருந்தால்! பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னது உண்மைதான்.

காந்தி அவர்கள் விரும்பிய முதன்மையான ஒன்று நடக்காமலே போனது. இந்திய விடுதலைக்குப் பின் இந்திய விடுதலைக்காக கட்டமைத்த காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள் அது தேவை இல்லை என்று கூறியிருந்தார்கள் என்பதுதான் அது. பொன்.ராதாகிருஷ்ணன் காந்தியார் பிறந்த நாளில் முன்னெடுத்த செய்தி.

16,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காந்தி அவர்கள் விரும்பிய முதன்மையான ஒன்று நடக்காமலே போனது. இந்திய விடுதலைக்குப் பின் இந்திய விடுதலைக்காக கட்டமைத்த காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள் அது தேவை இல்லை என்று கூறியிருந்தார்கள் என்பதுதான் அது.

காந்தியாரின் 150 வது பிறந்தநாளையொட்டி பாஜக சார்பில் நடைபெற்ற ஒரு சிற்றணி நிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் விழாவில் கலந்து கொண்ட, இந்திய முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ‘காந்தியார் விரும்பிய அந்த நிகழ்வு அன்று நடந்து இருந்தால் இன்று நாடு செழிப்பாக இருந்து இருக்கும் என தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தார். 

இந்திய முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சொல்வது நூறு விழுக்காடும் சரிதான். இந்திய விடுதலைக்குப் பின்னதாக காங்கிரஸ் என்ன சாதித்தது? ஆட்சியில் ஆங்கிலேயர் இருந்த இடத்தில், பார்ப்பனியர்களை அமர்த்தியது. ஆங்கிலம் இருந்த இடத்தில் ஹிந்தியை நிறத்த முயன்று தமிழகம் தவிர பிறமாநிலங்களில் கொஞ்சம் வெற்றியும் பெற்றது. தமிழக மீனவர்களுக்கு பெரிதும் உதவி வந்த கட்சத் தீவை இலங்கைக்குக் கொடுத்தது. ஆங்கிலேயர் முன்னெடுத்து வந்த தொல்பொருள் ஆய்வுகள் அனைத்தையும் முடக்கி இந்தியாவின் வரலாற்றை திரித்து எழுதியது. அன்னிய மண்ணில் கூட தமிழர் முன்னேற்றம் அடைந்து விடாமல் இருக்க இலட்சக்கணக்கான தமிழர் ஒழிப்பு நடவடிக்கைக்கு வேதியியல் ஆயுதங்கள் வழங்கி ஒத்துழைத்தது.

ஆனாலும் கூட இந்தியப் பொருளாதாரத்தை தீர்மானிக்கிற இடத்தில் தமிழகமே இரண்டாவது இடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. ஒருவேளை காங்கிரஸ் கலைக்கப் பட்டிருந்திருக்குமானல், அனைத்து மாநிலங்களுமே, பார்ப்பனிய மற்றும் கார்ப்பரேட்டுகள் ஆதிக்கம் இல்லாமல் தமிழகம் போல வளர்ந்திருக்கும். தமிழர்கள் உலக அளவில் பொருளாதாரத்தை தீர்மானிக்கிற இரண்டாவது இடத்தில் இருந்திருப்பார்கள். 

பாஜக வந்திருக்க முடியாது. இந்தியா- ஒன்றியமாக சிறப்பாக வளர்ந்திருக்கும். பட்டியல் மொழிகள் இருபத்தி இரண்டும் போற்றிக் கொள்ளப் பட்டிருக்கும். அனைத்து மாநிலங்களிலும் கல்வி வளர்ந்திருக்கும். நீட்டுக்கும் நீட் குளறுபடிக்குமான தேவை இருந்திருக்காது. சாலை விதிகள் மேலை நாடுகளைப் போல சிறப்பாக இருந்திருக்கும். சுங்கச்சாவடிகள் வசூல் இருந்திருக்காது. கூகுள் வரைபடத் தேடலில் தமிழக ஊர்கள் தமிழ், ஆங்கிலத்திலும், கர்நாடக ஊர்கள் கன்னடம் ஆங்கிலத்திலும் என்றவாறு கூகுளால், இந்தியாவின் அனைத்து மொழிகளும் அங்கரிக்கப் பட்டிருப்பது போல, இந்தியா முழுவதும் அட்டவணை எட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளும் அங்கிகரிக்கப் பட்டு சிறப்படைந்திருக்கும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,294.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.