Show all

இன்றைய தலைப்பாகிறது! பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள், தப்பித்தல் மீதான சுட்டுக்கொல்லல் நடவடிக்கை

பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற வழக்கில் கைதான நால்வர், இன்று தப்பித்தல் மீதாக சுட்டுக்கொல்லப்பட்டதை பெண்ணின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற வழக்கில் கைதான நால்வர், இன்று தப்பித்தல் மீதாக சுட்டுக்கொல்லப்பட்டதை பெண்ணின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.

இந்தியா முழுவதும் இந்த தப்பித்தல் மீதாக சுட்டுக்கொல்லப்பட்ட நடவடிக்கைக்கு பொதுமக்கள் நடுவே வரவேற்பு எழுந்துள்ளது. எனினும், வழக்கின் விசாரணை நிலையிலே, காவல்துறையினர் கைதானவர்கள்மீது, தப்பித்தல் மீதாக சுட்டுக்கொல்லப்பட்டதான நடவடிக்கையை முன்னெடுத்திருக்கக் கூடாது. ஒருவேளை உண்மையான குற்றவாளிகள் வெளியில் பத்திரப்படுத்தல், அல்லது தப்பித்தல் முன்னெடுப்பு சார்ந்த நடவடிக்கையாகவும் ஏன் இருக்கமுடியாது என்றும் ஐயுறுகின்றனர்- சில மனித உரிமை ஆர்வலர்கள்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியான ஷாத்நகரில் உள்ள சுங்கச்சாவடி அருகே கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இரவு கால்நடை பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெண் தனியாக சுங்கச்சாவடியைக் கடப்பதை கண்ட சிலர் வேண்டுமென்றே பெண்ணின் வண்டியை பஞ்சர் செய்துள்ளனர். இதனை அடுத்து, அந்தப் பெண் உதவியின்றி தவித்து நிற்கும் போது, உதவுவது போல சென்று, அவரை அங்கிருந்து கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை அடுத்து, பெட்ரோல் உற்றி எரித்துக்கொன்றுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக கேசவலு, சிவா, நவீன் மற்றும் முகமது பாஷா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த நிகழ்வில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. குற்றவாளிகளை விரைவாக விசாரித்து, கடுமையான தண்டனை வழங்கவும், வழக்கை விசாரிக்க விரைவு அறங்கூற்றுமன்றம் அமைக்கப்பட்டது.

இதற்கிடையே இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கேசவலு, சிவா, நவீன் மற்றும் முகமது பாஷா ஆகியோரை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் ஒரு பகுதியாக, இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிகழ்வு நடந்த இடத்திற்கு குற்றவாளிகளை அழைத்து சென்ற காவல்துறையினர் எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டச் செய்தனர்.

அப்போது 4 பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், இதனை அடுத்து அவர்கள் மீது தப்பித்தல் மீதாக சுட்டுக்கொல்லல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த தப்பித்தல் மீதாக சுட்டுக்கொல்லல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பெண்ணின் சகோதரி, “இந்த தப்பித்தல் மீதாக சுட்டுக்கொல்லல் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். காவல்துறை மற்றும் ஊடகம் அனைவருக்கும் நன்றி. எங்களுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். பெண்ணின் பெற்றோர், தங்களது மகளின் உயிர்ப்பதிவு இப்போது அமைதியடையும் என்றும் கூறியுள்ளனர்.

டெல்லியில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்த நிர்பயாவின் தாயார் கூறுகையில், “இந்த தப்பித்தல் மீதாக சுட்டுக்கொல்லல் வரவேற்கத்தக்கது. 7 ஆண்டுகளாக எனது மகளுக்கான நியாயத்திற்காக அலைந்து கொண்டிருக்கிறேன். எனது மகளை கொன்றவர்களையும் தூக்கிலிடவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,358.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.