Show all

ஆப்கானிஸ்தான் மக்கள் மீது பாசம் பொழியும் பாஜக- இலங்கைத் தமிழர்களுக்கு வாதாடும் சிவசேனா! குடியுரிமை சட்டதிருத்தம்

குடியுரிமை சட்டதிருத்த முன்வரைவு- நேற்று மக்களவையில் பதிகை செய்யப்பட்டது. இந்தக் குடியுரிமை சட்டதிருத்த முன்வரைவு ஆப்கானிஸ்தான் மக்கள் மீது பாசம் பொழியும் பாஜக நிலையை தெளிவு படுத்தியது. இலங்கைத் தமிழர்களுக்கு வாதிட்டது சிவசேனா. ஹிந்துக்கள் யாரெல்லாம் என்பதில், இருவேறு கோணத்தை முன்மொழிகின்றன பாஜகவும் சிவசேனாவும்.

24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஷ்தூன் இனத்தவரான அப்துல் கப்பாரின் (இந்தியாவில் எல்லைக்காந்தி என்று அழைக்கப்பட்டவர்) தாய்நாடு ஆப்கானித்தான். அவர் பிறந்தது பஷ்தூ மொழி ஆட்சிமொழியாக இருக்கும் பாகிஸ்தானின் கைபர்பக்தூன்க்வா மாநிலத்தின் தலைநகர் பெசாவரில். அவர் போராடியது மதப்பிரிவினைக்கு முந்தைய ஒட்டு மொத்த இந்தியாவிற்கு.  அப்துல் கப்பார் அவர்களை ஒரு குறியீடாக எடுத்துக் கொண்டு, பாஷ்தூன் இனமக்களுக்கும் வடஇந்திய மக்களுக்குமான மொழி, பழக்கவழக்கங்கள், கலாச்சாரத் தொடர்புகளை ஆராய்ந்தால், இந்தியாவிற்கு ஒரு வரலாற்று ஆவணம் கிடைக்கக்கூடும் என்பது உறுதி.

இப்படி நமது கருதுகோளை முன்னிறுத்தி பஷ்தூ மொழி! உலகமொழிகள் வரிசையில் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். (இணைப்பு: http://www.news.mowval.in/News/world/Pashto-language-7789.html ) 

ஆனால் பாஜகவிற்கு முன்னேமேயே இப்படி ஒரு நோக்கம் இருந்திருக்கிறது என்பதை நேற்று மக்களவையில் பதிகை செய்யப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த சட்டமுன்;வரைவு மூலம் தெரிய வருகிறது. ஆம் பாஜகவிற்கு பஷ்தூ மொழி பேசும் ஆப்கானிஸ்தான் மீது அப்படியொரு பாசம். இந்த சட்ட முன்வரைவு ஆப்கானிஸ்தான் மக்களை இந்தியாவில் ஏற்றுக் கொள்வதற்காகவே முன்னெடுக்கப் பட்டது போல அவ்வளவு தெளிவாய் இருக்கிறது.

ஆதே சமயம் சிவசேனா- ‘பஷ்தூ மொழி பேசும் ஆப்கானிஸ்தான் மக்கள் ஹிந்துக்கள் என்றால், தமிழ்மொழி பேசும் இலங்கை மக்கள் ஹிந்துக்கள் தானே என்று மாநிலங்களவையில் குடியுரிமை சட்ட திருத்த முன்வரைவு விவாதத்தில் வாதாடியிருப்பது ஆறுதல் மட்டமல்ல பல்வேறு ஆய்வுகளுக்கும்; உரியதும் கூட. 

குடியுரிமை (திருத்த) சட்டமுன்வரைவில் இலங்கை அகதிகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று சிவசேனா கட்சி நேற்று மக்களவையில் வலியுறுத்தியது. மக்களவையில் குடியுரிமை (திருத்த) சட்டமுன்வரைவு தொடர்பான விவாதத்தில் நேற்று பேசிய சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர் விநாயக் ரவுத், 
“இந்த சட்டமுன்வரைவின் அடிப்படையில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த முஸ்லீம் அல்லாதவர்களை இந்திய குடிமக்களாக ஏற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் பெயரை இதில் சேர்க்கப்பட்டது ஏன் என புரியவில்லை. ஆப்கானிஸ்தான் சேர்க்கப்பட்டிருந்தால், இலங்கையும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். ஆப்கானிஸ்தானை நீக்குங்கள், இல்லையெனில் இலங்கையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டால் அது நல்லது” என்று வாதாடினார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,362.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.