Show all

அத்துறையில் பணிபுரிந்ததை வெளியில் சொல்ல வெட்கமாம்! முன்னாள் நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரி ரகோத்தமன்;

19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் குற்றப்புலனாய்வுத் துறையில் பணிபுரிந்ததை  வெளியில் சொல்ல வெட்கப்படுவதாக, முன்னாள் நடுவண் குற்றப்புலனாய்வுத் துறைஅதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார். 'பா.ஜ.க. ஆட்சியில் சீரழியும் நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை' என்ற தலைப்பில் சென்னை ராயபுரத்தில் நடந்த கருத்தரங்கில் அவர் பங்கேற்று உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரகோத்தமன்,  நடுவண் அரசு, 'நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை' அமைப்பை அடிமையாக்கி விட்டதாக தெரிவித்தார். சாமானிய மக்களின் கண்டனங்களுக்கு ஆளாகும் அளவுக்கு, ஆள்பவர்கள் நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை மதிப்பை குலைக்கும் நடவடிக்கை எடுத்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிகாலத்தில், நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை ஆரிய ஆதிக்க கும்பலிடம் இருந்தது என்று சொல்லப் பட்டது. பாஜக ஆட்சியில் அது பாஜக கும்பலிடம் சிக்கிக் கொண்டதாக சொல்லப் படுகிறது. ஆக நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை, நடுநிலையான அமைப்பாக உண்மைக்கு தோள் கொடுக்கும் அமைப்பாக இருந்ததேயில்லை. இதிலே முன்னாள் நடுவண் குற்றப்புலனாய்வுத் துறைஅதிகாரி ரகோத்தமன் வெட்கப் படுவதற்கு ஒன்றும் இல்லை. என்றைக்கும் வெட்கித் தலைகுனிய வேண்டியவர்கள் மக்கள் மட்டுமே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,962.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.