Show all

தீர்ப்பு எப்போது என்பதைக் குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர் அறங்கூற்றுவர்கள். மோடிஅரசு மீதான ராபேல் போர்விமான வழக்கு

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக உச்ச அறங்கூற்றுமன்ற மேற்பார்வையில் நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணை முடிந்தது. தீர்ப்பு எப்போது என்பதைக் குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்தனர் அறங்கூற்றுவர்கள். 

ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக, வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் தொடர்ந்த பொதுநல வழக்கை- 

உச்ச அறங்கூற்று மன்றத்தின், தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் தலைமையில், எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகிய அறங்கூற்றுவர்கள் அடங்கிய 3 அறங்கூற்றுவர்கள் அமர்வு, விசாரித்து வந்தது. 

ஒப்பந்தம் தொடர்பாக புகாரை பதிவு செய்வதற்கு உச்ச அறங்கூற்று மன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நடுவண்குற்றப் புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிடுவதோடு குறிப்பிட்ட கால இடைவெளியில் விசாரணை விவரங்களை உச்ச அறங்கூற்று மன்றமே நேரடியாக கண்காணித்து பெற வேண்டும் என்றும், மனுவில், கோரிக்கை விடுக்கப்பட்டது. 

அறங்கூற்றுவர்கள் இன்று, மனுதாரர் தரப்பு, நடுவண் அரசு தரப்பு, விமானப்படை தரப்பு ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். 

மாநில அரசு மீதான வழக்கு என்றால், 1.நகைச்சுவை 2.அழுகை 3.இளிவரல் 4.மருட்கை 5.அச்சம் 6.பெருமிதம் 7.வெகுளி 8.உவகை 9.சமநிலை என்னும் ஒன்பான் சுவைகளும் மக்களுக்கு கிடைத்திருந்திருக்கும். நடுவண் அரசு மீதான வழக்கு என்பதால் உப்பு சப்பில்லாமல் முடிந்திருக்கிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,971.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.