Show all

பணமதிப்பிழப்பு முன்னெடுக்கும் அவலம்! மழைநின்றாலும் தூவணம் விடாத கதை: மக்கள் நம்பிக்கையிழந்த ரூ10காசுகள் ரூ2000தாள்கள்

ரூ10க்கான காசுகளை- தமிழகத்தின் மிகப்பெரும்பாலான ஊர்களில் செலுத்த முடிவதில்லை. ரூ.2000 தாளை- வாங்க மறுக்கிறார்கள் சிறு வியாபாரிகள். ரூ.2000 தாளை மாற்ற முடியாதா? பாதிக்கப்பட்டவர்களின் கேள்வி

22கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் எட்;டாம்நாள் இரவு 8 மணியளவில் தலைமைஅமைச்சர் மோடி, நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 தாள்களை செல்லாது என்று அறிவித்தார். கருப்புப் பணம் மற்றும் கள்ள ரூபாய்தாள்களை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்படுவதாகவும், சற்று சிரமம் இருந்தாலும் வரும் காலத்தில் இதற்கான பலன்கள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். கிடைத்த தென்னவோ ஒவ்;வொரு ஆண்டும் அந்த நாளை கருப்பு நாளாகக் கொண்டாடும் சோகந்தான். மழைநின்றாலும் தூவணம் விடாத கதையாக பணமதிப்பு முன்னெடுக்கும் புதுப்புதுச் சிக்கல்கள் தொடர்ந்த வண்ணமாய் இருக்கிறது. புதியதாக எழுந்திருக்கிற சிக்கல்: மக்களின் நம்பிக்கையிழந்த ரூ10காசுகள் ரூ2000தாள்களின் கதை.

மோடி முன்னெடுத்த அந்தக் கருப்புநாளைத் தொடர்ந்து ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் தாள்களுக்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிதாக வெளியிடப்பட்ட ரூ.2000 தாளை- கள்ளத்தனமாக அச்சடிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்தே வந்தது. அண்மையில் பேசிய முன்னாள் நிதித் துறை செயலாளரான சுபாஷ் சந்திர கார்க், 2000 ரூபாய் தாள்களை செல்லாதவையாக அறிவிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், புழக்கத்தில் இருக்கும் ரூபாய் தாள்களில் மூன்றில் ஒரு பங்கு 2000 ரூபாய் தாள்களாக இருப்பதாகவும், அவை அதிகளவில் பதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனால், மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு வருமோ என்று மக்கள் அச்சமடைந்தனர். இது ஒருபக்கம் இருக்க, 2000 ரூபாய் தாள் அச்சடிப்பதை கட்டுப்பாட்டு வங்கி முற்றிலும் நிறுத்தியது. இதனால், மக்களிடையே 2000 ரூபாய்தாள் புழங்குவது குறையும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். தற்போது, பணம்வழங்கும் இயந்திரங்களிலும் 2000 ரூபாய் தாள்கள் குறைவாகவே கிடைக்கின்றன.

இந்த நிலையில், சமூக வலைதளங்கள் வழியாக ரூ.2000 தாளை அடுத்த மாதம் முதல் மாற்ற முடியாது எனவே உடனடியாக உங்கள் கையில் இருக்கும் 2000 ரூபாயை வங்கியில் செலுத்தி மாற்றிவிடுங்கள் என்று ஒரு தகவல் வெளியானது.

இந்த தகவல்கள் பரவும் நிலையில், கிராமப் புறங்களில் தற்போது 2000 ரூபாய் தாளை கடைகளில் வாங்க மறுக்கின்றனர். இதனால், பலரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்த தகவல்கள் உண்மையா? என்று வங்கி அதிகாரிகளிடம் கேட்கும் போது, 2000 ரூபாய் தாளை கட்டுப்பாட்டு வங்கி அச்சடிப்பது குறைந்தது உண்மைதான். ஆனால், அடுத்த மாதம் முதல் அதனை மாற்ற முடியாது என்பதில் உண்மை இல்லை. புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் தாளை மதிப்பிழப்பு செய்யும் எந்த திட்டமும் தற்போது கட்டுப்பாட்டு வங்கி தரப்பில் இல்லையென்று தெரிவிக்கின்றனர். அடுத்து ரூ10காசுகளின் கதையும் இவ்வாறாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. 

அனைத்திற்கும் அடிப்படையான பணத்தின் மீது மக்களை நம்பிக்கை இழக்கச் செய்த மோடியின் பாஜக அரசை- பொருளாதார அறிஞர் பெருமக்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,360.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.